ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராஜினாமா..பஞ்சாப் அரசியலில் பரபரப்பு!

Loading

பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான அரசில் அங்கீகாரம் இல்லாததால் அன்மொல் அரசியலை விட்டே விலகியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல் மந்திரி பகவந்த் தலைமயிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவருகிறது.சமீபத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தனது கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் அணி மாறலாம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி தலைவர் கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அன்மொல் கஹன் மான் எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். பஞ்சா மாநிலம் ஹரர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. 35 வயதான அன்மொல் கஹன் மான் பாடகியாவார். 2020ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த இவர் 2022ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அன்மொல் சுற்றுலா, கலாசாரத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். ஆனால், 2024ம் ஆண்டு அன்மொல் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியலை விட்டு விலகுவதாகவும் அன்மொல் அறிவித்துள்ளார்.பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான அரசில் அங்கீகாரம் இல்லாததால் அன்மொல் அரசியலை விட்டே விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலை விட்டு விலகுவதற்கான காரணம் குறித்து அன்மொல் தெரிவிக்கவில்லை.

0Shares