மகன், மகள் கண்முன்னே தாய் படு கொலை – மர்ம கும்பல் வெறிச்செயல்!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே, முகமூடி அணிந்த மர்ம கும்பல் வீடு புகுந்து, 38 வயது ஜெர்மின் என்ற பெண்ணை வெட்டிக்கொலை செய்தது. தாய் ரத்தக் குளத்தில் கிடந்ததை பார்த்து, மகள் நிவேதா பெத்தனாட்சி (14) மற்றும் மகன் திஸ்வர் (10) அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வசித்துவரும் ஜெர்மின், எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் விஜயகோபாலின் மனைவி. அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 5 ஆண்டுகளாக தனித்துவாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் ,மகள் உள்ளனர்.இந்த தம்பதிக்குள் மாதாந்திர பராமரிப்பு தொகை குறித்து அடிக்கடி சச்சரவு ஏற்பட்டிருந்தது.
சம்பவத்தன்று நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நேரத்தில் வீடு புகுந்த மர்மர்ம கும்பல் ஜெர்மின் மீது திடீரென தாக்கியது. கழுத்து மற்றும் கைகளில் பலத்த வெட்டுகளால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து குழந்தைகளை மிரட்டிவிட்டு கும்பல் தப்பி ஓடியது.தங்கள் கண்முன் தாய் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அதனை தொடர்ந்து போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது கூலிப்படையினரின் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.ஜெர்மினின் கணவர் விஜயகோபாலிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாக இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.