பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த குத்திக்கொன்ற கார் மெக்கானிக்!
பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த லிவ் இன் காதலியை கார் மெக்கானிக் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், கொனசீமா மாவட்டம் சவரம் கிராமத்தை சேர்ந்த ஒலிடி புஷ்பா (22), விவாகரத்து பெற்ற இளம்பெண், 4 வயது மகனுடன் தாயார் மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வந்தார். வேலைக்காக விஜயவாடா சென்ற புஷ்பாவுக்கு ஷேக் ஷமி (22) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ரசோலி பகுதியில் லிவ்-இன் முறையில் வாழத் தொடங்கினர்.புஷ்பாவின் லிவ் இன் முறை குறித்து அறிந்த தாயாரும், சகோதரனும் ஷேக் ஷமியை ஏற்றுக்கொண்டுள்ளனர். பின்னர், 4 பேரும் ரசோலி பகுதியில் ஒரே வீட்டில் வசித்துள்ளனர்.
மதுபோதைக்கு அடிமையான ஷமி, புஷ்பாவை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. புஷ்பா மறுத்ததால், கடந்த வியாழக்கிழமை இரவு வாக்குவாதத்தின் போது ஷமி, கத்தியால் புஷ்பாவை கழுத்தில் குத்திக் கொன்றார். தடுக்க முயன்ற புஷ்பாவின் தாய் மற்றும் சகோதரருக்கும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன.
அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், போலீசார் புஷ்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தப்பியோடிய ஷமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.