இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

Loading

நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி .நெல்லை .தென்காசி. நீலகிரி.தேனி திண்டுக்கல். கோயம்புத்தூர். போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது .

கேரளாவில் இன்று முதல் மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்,கேரளாவில் 22-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.நாட்டில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது, 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது.

இந்தநிலையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இந்த நிலையில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

0Shares