தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் நடந்து வருகிறது –திமுக மீது தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு!
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதில் திமுக தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:திமுக அரசு தோல்வி, மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காமல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.தான் மக்களை சந்தித்து பத்து நிமிடம் பேச வேண்டுமென மு.க. ஸ்டாலின் சொல்கிறார். எத்தனை நிமிஷம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை.
நாமக்கல்லில் நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திமுகவுடன் தொடர்புடைய மருத்துவமனையில் விதிமுறைகளை மீறி வெளிநாட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
தற்போது ‘சிறுநீரக கடத்தல்’ பிரச்சினை எழுந்துள்ளது என தமிழிசை அதிர்ச்சி தகவல் வெளியிட்டார்.
காமராஜரை அவமதித்தது கேவலமானது. காமராஜர் எனும் மாபெரும் தலைவரை இந்த அளவுக்கு கொச்சை படுத்தி உள்ளனர். திருச்சி சிவா பேசுவதை விட்டுவிட வேண்டும் என கேட்கிறாரே தவிர தப்பு என கூறவில்லை. முதலமைச்சரும் ஒரு தலைவரை களங்கப்படுத்தி விட்டனர் என கூறவில்லை. காங்கிரஸ் வெறும் ஓட்டு அரசியலில் திமுகவோடு இணைந்துள்ளது என குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் மகளிருக்கு 1500 ரூபாய் கொடுத்தாலும் டாஸ்மாக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த எங்களிடம் திட்டம் உள்ளது. ஸ்டாலின் போல முன்வாசலில் கொடுத்துவிட்டு பின் வாசலில் பிடுங்குவது நாங்கள் அல்ல. அதிமுக, பாஜக இடையே எந்த விரிசலும் இல்லை; NDAவில் பிரேக் இல்லை, INDIA கூட்டணியில்தான் பிரேக் உள்ளது என கூறினார்.
மகாராஷ்டிராவில் 78 லட்சம் பெண்களை லட்சாதிபதியாக ஆக்கியுள்ளோம். ஆனால் தமிழகத்தில் ரூ.1000 கொடுத்து, மது மூலம் ஆறு ஆயிரம் ரூபாய் பிடிக்கிறது திமுக அரசு என கடுமையாக விமர்சித்தார்.