உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கோரிக்கை மனுக்களைப் பெற்றார்கனிமொழி MP !

Loading

கோவில்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி தொடங்கி வைத்து மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.அரசு துறை சேவை, திட்டங்களை, வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில்’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 196 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து, நவம்பர் 30-ந் தேதி வரை இந்த முகாம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோவில்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி தொடங்கி வைத்து மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா கல்யாண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கா.கருணாநிதி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0Shares