குடி குடியை கெடுக்கும்..நடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!
MGR நகர் பகுதியில் விருகம்பாக்கம் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குடியால் ஏற்படும் விளைவுகளை நடித்து காட்டியதுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாட்டில் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதை விட இளைஞர்கள் இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்,
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று மது பாட்டில் வாக்கியமாக போட்டாலும் அதை கண்டுகொள்ளாமல் வாங்கி குடிக்கிறார்கள்,என்னதான் மது பழக்கத்தை விட்டுவிடவும் அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஒரு புறம் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .பொதுவாக தமிழகத்தில் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது, தமிழகத்தை பொறுத்த வரை இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி விடுகின்றனர்.இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு சமூக ஆர்வலர்களும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர், அந்த வகையில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் தெருவில் போதைப்பொருட்கள் போதை பொருட்கள் மற்றும் குடியை ஒழிக்க மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்,
விருகம்பாக்கம் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த CATALYST (சமூக வெளிநடவடிக்கை) MGR நகர் சந்தை மற்றும் MGR நகர் அரசுப் பள்ளியில் குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி அறிவியல் மாணவர்களால் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குடியால் ஏற்படும் விளைவுகளை மாணவர்கள் நடித்து காட்டியதுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த மாணவர்களின் விழிப்புணர்வில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.