சுருக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்..அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டம்!
ஓய்வூதியர் களை ஒன்றிய அரசின் ஊதிய குழுவின் பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதா வேலிடேசன் சட்டத்தை ரத்து செய்யகோரி வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்மாவட்டம் ஓய்வூதியர் களை ஒன்றிய அரசின் ஊதிய குழுவின் பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதா வேலிடேசன் சட்டத்தை ரத்து செய்யவும் நான்கு தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய கோருதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம் பன்னீர்செல்வம், தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பி ஞானசேகரன், வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பா.ரவி கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் பி. லோகநாதன், தபால் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ கதிர் அகமது அகில இந்திய ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் சி ஞானசேகரன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்க மாவட்ட அமைப்பாளர் செ. நா.ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அகில இந்திய துணைத் தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்திசிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் சா.ஜெயச்சந்திர பாக்யராஜ் நன்றி கூறினார்.