அந்த வீடியோவை அவர்கள் முன்பு பார்ப்பதா? – காவல்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு கண்டனம்!

Loading

இளம் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோ இணையதளங்களில் பரவிய வழக்கில், அந்த வீடியோவை அவருடைய முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு பாதிக்கப்பட்ட பெண் “கல்லூரியில் காதலித்த நபருடன் இருந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவுகின்றன” என மனு தாக்கல் செய்திருந்தார்.

அப்போது மத்திய அரசு மற்றும் காவல்துறைக்கு கடந்த ஜூலை 9ம் தேதி வீடியோக்கள் 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் மத்திய அரசு சில இணையதளங்களை முடக்கியதாக தெரிவித்தாலும், வீடியோக்கள் மீண்டும் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை தேவை என நீதிபதி வலியுறுத்தினார்.7 காவல்துறை அதிகாரிகள், அந்த வீடியோவை பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னிலையில் காண்பித்து விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியது.

இதனை “மன உளைச்சலை அதிகரிக்கும் அமைதிகேடான செயலாக” குற்றஞ்சாட்டிய நீதிபதி, இத்தகைய வழக்குகளில் பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரணைக்கு நியமிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

முதல் தகவல் அறிக்கையில் (FIR) பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இடம்பெற்றுள்ளது.இதனை உடனடியாக நீக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு, இணையதளங்களின் தடை, புகாரளிக்கும் வழிமுறைகள், அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக மனு தாக்கல் செய்யவேண்டும்.மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு நேரடி உதவி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

0Shares