17-ஆம் தேதி அதிமுக போராட்டம் ..எடப்பாடி பழனிசாமி அழைப்பு!
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகாததைக் கண்டித்து, அதிமுக 17 தேதி (வியாழக்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:”விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் மக்களின் நலனுக்காக செயல்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கி வருகிறது. நிகழ்ச்சிகளைத் தாமரையாக செய்து, ஸ்டிக்கர் ஒட்டும் அரசாகவே செயல்படுகிறது. இது ஒரு செயலற்ற ஆட்சி என்பதை நாள்தோறும் நிரூபிக்கிறது.”
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்ட 2025–26 மாணவர்சேர்க்கை அறிவிப்பில், விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையம் மட்டுமின்றி சேர்க்கை அறிவிப்பை வெளியிடவில்லை. இதனை “கொள்கைமற்ற அரசியல் நடவடிக்கை” என அவர் கண்டித்துள்ளார்.
“விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது,” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்,ஜூலை 17, 2025 (வியாழன்)
காலை 9 மணி அளவில் தலைமை: முன்னாள் அமைச்சர் சண்முகம், எம்.பி.இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், முன்னாள் பிரதிநிதிகள், மற்றும் பொது மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் வகையில் நடைபெறும் எந்த நடவடிக்கையும் நாங்கள் ஏற்கமாட்டோம்,” என பழனிசாமி வலியுறுத்தினார்.