புதிய குடும்பங்களுக்கு புதிய ரேஷன்கார்டு.. MLA அனிபால் கென்னடி வழங்கினார்!

Loading

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கினார்.

புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டு) பெற்றுத் தரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் திமுக கழக துணை அமைப்பாளர் மற்றும் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி அவர்கள், கடந்த நாட்களில் தங்களிடம் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு அரசு அதிகாரிகளை தொடர்ச்சியாக சந்தித்து பேசி, பரிந்துரை செய்து குடும்ப அட்டை கிடைத்திட செயல்பட்டார்.

அதன் விளைவாக, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டைகள் இதுவரை 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அனிபால் கென்னடி எம்எல்ஏ அவர்களால் வழங்கப்பட்டுள்ளன.இது தொடர்பான அட்டை வழங்கும் நிகழ்வில் குடும்ப அட்டைகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி அவர்கள், சிவப்பு அட்டை பெற்ற மக்கள் உடனடியாக அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இத்துடன், குடும்ப அட்டைகள் பெற்ற மக்களும், தங்கள் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக அமையும் இந்த நடவடிக்கைக்கு நன்றியை தெரிவித்தனர். சமூக நலத்திற்காக மக்களுடன் நீடித்த உறவோடு செயலில் ஈடுபடும் அனிபால் கென்னடி எம்எல்ஏவின் சேவை பெருமையாகப் பேசப்படுகிறது.

நிகழ்ச்சியில் அதிகாரி கிருஷ்ணகுமார், தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி துணை செயலாளர் ராஜி மற்றும் நிசார், கிளை செயலாளர்கள் , கழக சகோதரர்கள் உடன் இருந்தனர்.

0Shares