கோவில்பட்டியில் அரசு பள்ளி புதிய கட்டிடங்களை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியர்!
கோவில்பட்டி அரசு பள்ளியில்புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்துவைத்தனர் .
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் தகைசால் மேல்நிலை பள்ளியில் நுண்கலைகள் மற்றும் இசைக்கருவி வகுப்புகளின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
கோவில்பட்டி அரசு மகளிர் தகைசால் மேல்நிலைப் பள்ளியில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கான 10 லட்சம் மதிப்பீட்டில் இசைக்கருவிகள் வகுப்புக்கான புதிய கட்டிடமும்,பொன்னூஸ் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் சார்பில் 26 லட்சம் மதிப்பீட்டிலான நுண் கலைகள் வகுப்புக்கான பொ சூசையம்மாள் நினைவு கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமை வகித்தார்.
முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி,பொன்னூஸ் நேச்சுரல்ஸ் நிறுவன உரிமையாளர் பொன்னுசாமி,லிபர்டி நிறுவனங்களின் உரிமையாளர் எஸ்.எஸ் டி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் ஜெயலதா அனைவரையும் வரவேற்றார்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து நுண்கலை மாணவர்களின் நடனத்தையும்,இசைக்கருவி வாசிக்கும் மாணவர்களையும் கண்டு ரசித்து பாராட்டினார்,
புதிய கட்டிடங்களுக்கு நன்கொடை வழங்கிய பொன்னூஸ் நேச்சுரல் ஸ் உரிமையாளர் பொன்னுசாமி, லிபர்டி நிறுவன உரிமையாளர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு. நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
இதில் நகர்மன்ற சேர்மன் கருணாநிதி,மாவட்ட கல்வி அலுவலர்கள்,மரிய ஜான் பிரிட்டோ, சேகர்,பள்ளி மேலாண்மை குழு தலைவி ரெங்கம்மாள்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜலட்சுமி,நகர் மன்ற உறுப்பினர்கள் உலகு ராணி,சித்ராதேவி உள் பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியை உஷாராணி நன்றி கூறினார்.