ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க எதிர்ப்பு..இளைஞர் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்!

Loading

திரு. ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்குவதை கண்டித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைப்பெற்றது. இதில் புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது அந்த இடத்திற்கு சொந்தமான இடங்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் உள்ளது. குறிப்பாக காமராஜர் நகர் தொகுதியில் உள்ள ரெயின்போ நகரில் இந்த கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான இடம் உள்ளது. இந்த இடத்தை அந்தத் தொகுதி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் இரண்டு வருடங்களுக்கு முன்பாக அவருடைய பெயரிலும், அவருடைய குடும்பத்தார் பெயரிலும் சட்டத்திற்கு புறம்பான வகையில் பத்திரப்பதிவு செய்து கொண்டார். இதனை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பாக என்னுடைய சார்பிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம் பிறகு நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றம் அந்த இடத்தை மீண்டும் கோயிலுக்கு ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து அந்த இடத்தை மீண்டும் கோவிலுக்கு ஒப்படைத்தார்.

ஆனால் இதையெல்லாம் பாரதிய ஜனதா கட்சி ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் நிலத்தை அபகரித்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு தற்பொழுது அமைச்சர் பதவி கொடுக்க தயாராக உள்ளனர். இது போன்று பொது சொத்தை சட்டத்திற்கு புறம்பாக அபகரித்த ஜான் குமாரை அமைச்சராக அமர்த்தக் கூடாது என்று இளைஞர் காங்கிரஸ் சார்பாக திரு. கல்யாணசுந்தரம் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.

முதலாவதாக ஆளுநருக்கு கடிதமும் இது சம்பந்தமான ஆவணங்களும் அனுப்பபட்டுள்ளது. அதனை தொடர்ந்து புதுச்சேரியின் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் காமாட்சியம்மனிடம் அம்மாவின் பக்தர்கள் சார்பாகவும் புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பாகவும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு புதுச்சேரியை சார்ந்த மக்கள் பயபக்தியுடன் அவர்களுடைய நிலங்களை அம்மனுடைய கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டு அம்மனுடைய பாதங்களில் சரணடைந்து விட்டார்கள். அவர்கள் எழுதிக் கொடுத்த அந்த நிலங்களை பல நூறு ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் பாதுகாத்து வந்தனர். ஆனால் தற்போது இதனை சீர்குலைக்கும் விதமாக காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. ஜான் குமார் அம்மனுக்கு சொந்தமான நிலத்தை போலி உயில் மூலம் தன்னுடைய குடும்பத்தார் மீது பத்திரப்பதிவு செய்து கொண்டார். இது அம்மனுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும். இதனை கல்யாணசுந்தரமாகிய நான் புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பாக கண்டித்து இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்திக் கொண்டு வருகின்றேன். தற்போது இந்த N.R காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அரசு உன்னுடைய நிலத்தை அபகரித்த திரு.ஜான் குமார் அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர். இது பக்தர்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகம் எனவும் இதுபோன்ற துரோகிகளுக்கு புதுச்சேரி மக்கள் மூலம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் N.R காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசுக்கு கடுமையான பாடம் கற்பிக்க வேண்டும் என்று உம்மை வணங்கி பயபக்தியுடன் கேட்டுக்கொள்கின்றோம் என காமாட்சியம்மனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கை தலைமை அர்ச்சகரிடம் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக திரு. ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்குவதை கண்டித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைப்பெற்றது. இதில் புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இளைஞர்கள் என சுமார் 75 பேர் தலைமை தபால் நிலையத்திலிருந்து இந்திய ஜனாதிபதிக்கு திரு. ஜான்குமாரை அமைச்சராக நியமிக்க கூடாது எனவும் காமாட்சியம்மன் கோயில் நில அபகரிப்பு சம்மந்தமான ஆவணங்களையும் இணைத்து தபால் அனுப்ப பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் துணைதலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் ராஜாராம், லோகையன், ஜெகதீஷ் உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

0Shares