பீகார் சட்டபேரவை தேர்தலை அபகரிக்க முயற்சி..பாஜக மீது ராகுல் காந்தி புகார்!

Loading

மகாராஷ்டிராவை போல பீகார் சட்டபேரவை தேர்தலையும் சட்டசபை அபகரிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ராகுல் காந்தி புகார் தெரிவித்தார்.

சமீப காலமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார் .ஆளும் கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதற்காக தேர்தல் ஆணையமும் ராகுல் காந்திக்கு தக்க பதிலடி கொடுத்தது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கண்டனத்தை தெரிவித்தது .இந்த நிலையில் மேலும் தேர்தல் ஆணையம் மீது தனது அதிருப்தியை ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

பாஜகவின் ஒரு அணியாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். ஒடிசாவில் நேற்று நடந்த அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசும் போது மகாராஷ்டிராவை போல பீகார் சட்டத்தை தேர்தலையும் சட்டசபை தேர்தலையும் அபகரிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக புகார் தெரிவித்தார்.

நாடு முழுவதும் நமது அரசியலமைப்பு சட்டம் மீது பாஜக கடுமையான தாக்குதலை நடத்தி வருவதாகவும் இங்கு இந்தியா கூட்டணியில் பீகார் தேர்தலை பாஜக திருடுவதை தடுப்பது என முடிவு செய்யப்பட்டது தேர்தல் ஆணையம் தனது பணியை செய்யவில்லை மாறாக பாஜகவின் நலன்களுக்காக பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.. பாஜக அரசு ஐந்து முதல் ஆறு முதலாளிகளுக்காக மட்டுமே அரசை நடத்தி வருவதாகவும் சாதாரண மக்களுக்காக அதை செய்யவில்லை என புகார் கூறியுள்ள ராகுல் காந்தி நீர், காடு மற்றும் நிலம் பழங்குடியினருக்கானது. தொடர்ந்து அவர்களிடமே இருக்கும்.

பஞ்சாயத்துகள் சட்டம் 1996-ஐ ஒடிசா பா.ஜ.க. அரசு அமல்படுத்தவில்லை. பழங்குடியினருக்கு வன உரிமை பட்டாக்கள் வழங்கப்படவில்லை.பிஜு ஜனதா தள அரசைப் போலவே பா.ஜ.க. அரசும் ஒடிசாவை கொள்ளையடிக்கிறது என தெரிவித்தார்.

0Shares