ஸ்காலர்ஷிப் பெரும் மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடத்திய பள்ளி!

Loading

GIIS இல் முதன்மை உதவித்தொகை திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு முழு நிதியுதவியுடன் கூடிய உலகளாவிய கல்வி வழங்கப்பட்டது.

திறமை, இலட்சியம் மற்றும் ஆற்றலைக் கொண்டாடும் வகையில், குளோபல் இந்தியன் இன்டர்நேஷனல் ஸ்கூல் (GIIS), டெல்லியின் ஏரோசிட்டியில், குளோபல் சிட்டிசன் ஸ்காலர்ஷிப் (GCS) பெறும் மாணவர்களைக் கொண்டாடும் வகையில் ஒரு பிரமாண்டமான பாராட்டு விழாவை நடத்தியது. இது மதிப்புமிக்க GCS திட்டத்தின் 18வது பதிப்பைக் குறித்தது.

இந்த ஆண்டு தேர்வான மாணவர்கள் குழுவில் 10 சிறந்த மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர் — இவர்களில் எட்டுப் பேர் இந்தியாவையும், இருவர் மத்திய கிழக்கு பகுதிகளையும் சேர்ந்தவர்கள். அவர்கள் சிறந்த கல்விச் சாதனைகள், தலைமைத் திறன்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட GCS (குளோபல் சிடிசன் ஸ்காலர்ஷிப்) என்பது, GIIS பள்ளியின் முதன்மை முயற்சியாகும். இது கல்வியில் சமத்துவம் மற்றும் தரத்திற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை உள்ளடக்கியது. இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் உயர்தர மேல்நிலை கல்விக்கான (11 மற்றும் 12 ஆம் வகுப்பு) முழுமையான கட்டணமும், தங்குமிடமும், அவர்களுக்கு தேவையான செலவுகளும் 100% நிதியுதவியாக வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் சிங்கப்பூரில் உள்ள GIIS SMART Campus-இல் சிறப்பாக கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, உயர்தர வசதிகள் மற்றும் நிபுணத்துவம் மிக்க ஆசிரியர்கள் போன்றவற்றால் GIIS புகழ் பெற்றதாக உள்ளது. இங்கு மாணவர்களுக்கு CBSE மற்றும் IBDP பாடத்திட்டங்களில் தேர்வு செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த முக்கிய உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு மற்றும் மாத உதவித் தொகை வழங்கப்படுவதுடன், முழுக்கட்டணமும் இரு ஆண்டுகளுக்கு முற்றிலும் விலக்கப்படுகிறது. ஒரு மாணவருக்கான மொத்த கட்டணம் ரூ.1 கோடி ஆகும். இந்த தொகை முழுவதுமாக GCS திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

“குளோபல் சிடிசன் ஸ்காலர்ஷிப் என்பது வெறும் நிதியுதவி அல்ல; இது கனவுகளுக்கு வலுவூட்டும் சக்தி,” என்று குளோபல் ஸ்கூல்ஸ் குழுமத்தின் கல்வி இயக்குனர் திரு. பிரமோத் திரிபாதி குறிப்பிட்டார். “நாங்கள் எதிர்காலத் தலைவர்கள் – மாணவர்கள் மீது முதலீடு செய்கிறோம், அவர்கள் தொலைநோக்குப் பார்வை, உந்துதல் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளையும் செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். உலகளவில் சிந்திக்கவும் நோக்கத்துடன் செயல்படவும் துணிந்த இளம் மனங்களை ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவரும் கடுமையான மதிப்பீட்டு செயல்முறைகளில் பங்கேற்றனர். இதில் அவர்களின் கல்விச் செயல்திறன் மட்டுமல்லாமல் தலைமைத் திறன், சமூகப் பங்களிப்பு, பிரச்சனை தீர்க்கும் திறன்கள் மற்றும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியிலும் அர்ப்பணிப்பு உள்ளதா? என்பதையும் மதிப்பீடு செய்தனர்.

இந்த உதவித்தொகையைப் பெற்றவர்களில் ஒருவரான அசாமின் மோரன் நகரத்தைச் சேர்ந்த நிஷ்டா நிர்மிதா மஹந்தா கூறுகையில், “இந்த வாய்ப்பு எனது வாழ்க்கையை முழுமையாக மாற்றியுள்ளது. இது ஒரு மதிப்புமிக்க பிரபலமான கல்வி நிறுவனத்தில் படிப்பதை விட அதிகம் ஆகும். பெரிய கனவு காணவும், உயர்ந்த இலக்கை அடையவும், சிறப்பாகச் சேவை செய்யவும் நம்மை ஊக்குவிக்கும் ஒரு உலகளாவிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பது பற்றியது” என்றார்.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், கல்வியின் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியை அடிக்கோடிட்டுக் காட்டியது. ஒருவரின் பின்னணி மற்றும் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், உலகளவில் திறமையான மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் GIIS இன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

“ஒவ்வொரு புதிய மாணவர் குழுவிலும், குளோபல் சிட்டிசன் ஸ்காலர்ஷிப் திட்டம், வாய்ப்பு மற்றும் திறனை சந்திக்கும்போது சாத்தியமானதை மறுவரையறை செய்கிறது,” என்று குளோபல் ஸ்கூல்ஸ் குழுமத்தின் துணை சிஓஓ திரு. ராஜீவ் கவுல் கூறினார். “இந்த 10 சிறந்த மாணவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, அவர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் அபிலாஷைகளை மட்டுமல்ல, GIIS ஆல் வளர்க்கப்பட்ட தலைமைத்துவம், பரிவு மற்றும் சிறப்பின் நீடித்த மதிப்புகளையும் கொண்டு செல்கின்றனர்” என்றும் அவர் கூறினார்.

0Shares