இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்.. இன்சூரன்ஸ் ஊழியர்கள் நூதன பிரச்சாரம்!

Loading

எல் ஐ சி ஊழியர்களின் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பாக பொதுத்துறை பாதுகாப்பு மக்கள் சந்திப்பு பிரச்சாரம் ஆண்டிப்பட்டி வைகை அணை சாலை பிரிவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெரியகுளம் கிளைதலைவர் நாகபாண்டி தலைமை தாங்கினார் . கிளை செயலாளர் சசிகுமார் , மதுரை கோட்டத் தலைவர் சுரேஸ்குமார் சிறப்புரையாற்றினார்கள் . லியாபி முகவர் சங்கதலைவர் நல்லதம்பி , ஓய்வு பெற்ற வளர்ச்சி அதிகாரி பழனிவேல் வாழ்த்துரை வழங்கினார்கள். பொதுத்துறையை தனியார் மயமாக்க கூடாது என்பதை வலியுறுத்தி சுடர்கலைக்குழு சார்பில் தப்பாட்டம் மற்றும் நாடகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எல்ஐசி முகவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் பிரச்சாரத்தில் பொதுத்துறை எல்ஐசியை வலிமைப்படுத்த வேண்டும்.இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்தக் கூடாது. ஆயுள் மருத்துவ இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

பிரச்சாரம் நடைபெற்ற சாலை பகுதி வழியாக சென்ற பொது மக்களுக்கும் பொதுத்துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

0Shares