நிலச்சரிவை கணித்த நாய்; 67 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

Loading

நள்ளிரவில் சியாதி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், 20 குடும்பங்களில் சேர்ந்த 67 பேர் உயிர் தப்பிய அதிசய சம்பவம் ஒன்று பரபரப்பாக பேசப்படுகிறது.

இமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டம், தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம், தொடரும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஜூன் இறுதியில் இருந்து ஜூலை 6 வரை மட்டும் 19 முறை மேகவெடிப்புகள் நிகழ்ந்ததுடன், 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

நள்ளிரவில் சியாதி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், 20 குடும்பங்களில் சேர்ந்த 67 பேர் உயிர் தப்பிய அதிசய சம்பவம் ஒன்று பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த அதிசயத்தின் நாயகன், ஒரு நாய்!

நாயின் உரிமையாளர் நரேந்திரா, “என் வீட்டு 2வது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த நாய் திடீரென குரைத்தது. என்ன காரணம் என்று பார்த்த போது, சுவரில் பெரிய விரிசல், அதன் வழியாக தண்ணீர் கசியும் நிலை. உடனே நாயை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினேன். பிறகு மற்ற வீடுகளுக்கும் சென்றேன். அனைவரையும் எழுப்பி பாதுகாப்பான இடத்திற்கு சென்று தஞ்சம் புகுமாறு கேட்டுக் கொண்டேன்,” என கூறினார்.

சிறிது நேரத்தில் அந்த பகுதிக்கு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. பெரும்பாலான வீடுகள் தரைமட்டமாகியன. ஆனால் அனைத்து 67 பேரும் பாதுகாப்பாக தப்பியிருந்தனர்.

தப்பிய அனைவரும் தற்போது பக்கத்து கிராமத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நிலச்சரிவை உணர்த்திய நாயின் நேர்த்தியான உணர்வு மற்றும் உரிமையாளரின் அதிவேக செயல்திறன் காரணமாக, ஒரு கிராமமே உயிர் தப்பியுள்ள இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

0Shares