திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்..ஏராளமான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

Loading

கோவில்பட்டி கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு தலைமை வகித்தார்.கல்லூரி செயலாளர் கண்ணன்,ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன், தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.விருதுநகர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜவல்லி ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீடுகளிலிருந்து பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வழங்கிடவும்,குப்பைகளைமறுசுழற்சிசெய்துபயன்படுத்திடவும்,குப்பைகளை 50வகையாகதரம்பிரித்துஅதிகலாபம்ஈட்டுவதுகுறித்தும்சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது

இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் விநாயகா ரமேஷ்,அருண்,முத்துச்செல்வம், சீனிவாசன்,ரவி மாணிக்கம்,பழனி குமார்,நாராயணசாமி, இளங்கோ,உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கல்லூரி பேராசிரியர் ஸ்ருதி நன்றி கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர் விஜய கோபாலன் சிறப்பாக செய்திருந்தார்.

0Shares