இரயில்வே மேம்பாலம் இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணி..எதிர்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!

Loading

ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் அரும்பார்த்தபுரம் இரயில்வே மேம்பாலம் இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணிகளை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார்.

வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட அரும்பார்த்தபுரம் இரயில்வே மேம்பாலம் இணைப்புச்சாலை காலமுறை புதுப்பித்தல் பணி பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலைக் கோட்டம் மூலம் ரூ. 40 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை கோட்டம் செயற்ப்பொறியாளர் இராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் ஜெயராஜ், இளநிலை பொறியாளர் கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, தர்மராஜ், அவைத்தலைவர் ஜலால், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், தொமுச தலைவர் அங்காளன், ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணை செயலாளர்கள் ஹரி கிருஷ்ணன், ஜெகன்மோகன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளைக் கழக நிர்வாகிகள் தேவநாதன், சபரி, ஜனா, வீரக்கண்ணு, ஹரி, முத்து, வாசு, முருகன், ராமஜெயம், சுரேஷ், பாலகுரு, மிலிட்டரி முருகன், பாலு, கல்யாணசுந்தரம், முருகேசன், ரகு, ராஜேந்திரன், ஜீவா, வேலு, சந்தோஷ், மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0Shares