குழந்தையை தெரு நாய் கடித்து இழுத்தச் சம்பவம்..வீடியோ வைரல்!

Loading

திருவள்ளூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்த குழந்தையின் ஆடையை தெரு நாய் கடித்து இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது .உடனடியாக தாய் துரிதமாக செயல்பட்டு மீட்டதால் அசம்பாவிதம் தவிற்கப்பட்டது.

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வினோத்- தேவயானி தம்பதியின் மகள் தமிழ் நிலா என்கின்ற இரண்டு வயது குழந்தையுடன் (2) காமராஜர் சிலை அருகே உள்ள பாட்டி வீட்டுக்கு பள்ளத் தெருவில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையில் சுற்றி திரிந்த நாய் தாயுடன் நடந்து சென்ற குழந்தையை திடீரென பாய்ந்து ஆடையை கடித்து கிழித்ததுடன் இழுத்து சென்றது .

இதனால் பதறிப் போன தாயும் குழந்தையும் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.நடந்து வந்த குழந்தையை நாய் கடிக்க வந்து ஆடையை கடித்து கிழித்த சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாய் தன் குழந்தையை நாய் கடிக்க வந்ததை கண்டு மின்னல் வேகத்தில் நாயிடமிருந்து குழந்தை காப்பாற்றியதால் குழந்தைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

0Shares