கடைசி நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்..வருணபகவான் கைகொடுப்பாரா?

Loading

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கடைசி நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.

இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 72 ரன்கள் அடித்துள்ளது.

இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 536 ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது. அதேவேளை இந்தியா வெற்றி பெற 7 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய பரபரப்பான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் பர்மிங்காமில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக ஆட்டத்தை குறிப்பிட்ட நேரத்தில் (இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு) தொடங்குவதில் தாமதம் ஏபட்டுள்ளது. மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0Shares