நடிகை ஈஷா ரெப்பாவின் புதிய பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Loading

இப்படத்திற்கு ”ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என பன்முகத் திறன் கொண்ட தருண் பாஸ்கர், தற்போது ஒரு கிராமப்புற நகைச்சுவை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஏ.ஆர். சஜீவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ருஜன் யாரபோலு, ஆதித்யா பிட்டி, விவேக் கிருஷ்ணானி, அனுப் சந்திரசேகரன், சாதிக் ஷேக் மற்றும் நவீன் சனிவரபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், புதிய வீடியோவை வெளியிட்டு இப்படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ”ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

0Shares