மசினகுடி ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி ஊராட்சி பகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பில் நடைபெற்று வரும்,முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியம், மசினக்குடி ஊராட்சியில் செம்மநத்தம் கிராமத்தில் மாயாற்றில் இருந்து செம்மநத்தம் கிராம விவசாய நிலங்களுக்கு கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-2024 நிதியிலிருந்து ரூ.25 இலட்சம் மதிப்பில் நடைபெற்று முடிவுற்ற பணியினையும், பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.73 வீதம் ரூ.22.92 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், சூரிய ஒளி ஆற்றலில் இயங்கும் நீர் உந்து நிலையம் அமைத்தல் பணியினையும்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், செம்மநத்தம் கிராமத்தில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-2024 நிதியிலிருந்து செம்மநத்தம் கிராமத்தில் நடைபெற்று முடிந்த நீர் தேக்க தொட்டியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18.67 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாயவிலை கடையினையும், கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி வீடு 4வது தெருவிலிருந்து ராகினி வீடு முதல் நாகம்மா வீடு வரை ரூ.6.20 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலை பணியினையும்,
நாகம்மா வீடு முதல் ஷபீராபானு வீடு வரை ரூ.5.56 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணியினையும், மசினகுடியில் அமைக்கப்பட்டுள்ள இ பாஸ் சோதனை சாவடியில் வழியாக வெளி மாநிலங்களிலிருந்து, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் இ பாஸ் பெற்று வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்ரூ.18 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும், பொது நிதி 2024-2025 திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள மின் வேலியினையும்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.50 அமைக்கப்பட்டுள்ள வட்டார நாற்றங்கால் பண்ணை மண்புழு இயற்கை உரம் கிடங்கினையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மாநில நிதிக்குழு மானியம் 2023-2024 மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணியினையும் என மொத்தம் ரூ.1.16 கோடி மதிப்பில் நடைபெற்று வரும், முடிக்கப்பட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, பொக்காபுரம் அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் சமையலறை, உணவு பொருட்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்தும், மாயார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணாக்கர்களுடன் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடி, சமையற் கூடம் மற்றும் உணவு பொருட்களின் இருப்பு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, செம்மநத்தம் கிராமத்தில் 2025-2026 பிரதான் மந்திரி ஜென்மம் நிலம் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.73 இலட்சம் வீதம் 5 பயனாளிகளுக்கு ரூ.28.65 இலட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார். பின்னர் இக்கிராம மக்களின் கோரிக்கைகளான நிழற்குடை மற்றும் நடமாடும் நியாய விலைக்கடை அமைத்தல் ஆகியவற்றினை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினர் பொது நிதியிலிருந்து நிழற்குடை அமைத்து தரவும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் மற்றொரு நாளில் நடமாடும் நியாயவிலை கடை மூலம் பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், உதகை வட்டாட்சியர் சங்கர்கணேஷ், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சலீம், சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்