குப்பை சேகரிப்பு பணி மந்தம்.. நகராட்சி ஆணையரிடம் நேரில் புகார் அளித்த MLA!

Loading

புதுவை உப்பளம் தொகுதியில் குப்பை சேகரிப்பு பணியில் மந்தம் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி ஆணையரிடம் அனிபால் கென்னடி MLA நேரில் புகார் அளித்தார்.

உப்பளம் தொகுதி முழுவதும் ஸ்வச் பாரத் மிஷன் 2.0 “பசுமைப் போர்வீரன்” என்ற திட்டத்தின் கீழ் நகராட்சியின் ஒப்பந்த கம்பெனியின் மூலம் சுத்தம் செய்தல் மற்றும் குப்பை சேகரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வருகின்றன. இருந்தாலும், சில பகுதிகளில் குப்பை எடுக்கும் பணிகள் மற்றும் வீடுகளில் இருந்து குப்பை சேகரிக்கும் பணிகளில் கால தாமதம் ஏற்படுவதாக மக்கள் சார்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், நகராட்சி அதிகாரி டாக்டர் ஆர்த்தி அவர்களை நேரில் சந்தித்து, உப்பளம் தொகுதியில் காணப்படும் சுகாதாரப் பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்தார். இதனையடுத்து நகராட்சி நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்தல் மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை துரிதப்படுத்தியது.

சுத்தம் செய்தல் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பரிசோதனை செய்தார். அதன்போது தில்லை மேஸ்திரி வீதி – பாரதி வீதி சந்திப்பில் அடையாளம் தெரியாத வெளிநபர்கள் இரவில் கூடி மது அருந்தி, அந்த இடத்தை குடிகார கூடரமாக மாற்றிவிட்டதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் உடனடியாக அந்த இடத்தை பார்வையிட்டு, ஒத்தியாஞ்சலை காவல் ஆய்வாளர் செந்தில்குமாரிடம் வாட்ஸ்அப் அழைப்பின் மூலம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் கிளோவிஸ் மற்றும் திமுக கிளைச் செயலாளர் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares