நான்கு ஜோடிகளுக்கு திருமணம்.. நெய்வேலி MLA இராஜேந்திரன் நடத்தி வைத்தார்!
![]()
இந்து அறநிலையத்துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு திருமணத்தை சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு மாநில அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 32 இணையர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டுத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னின்று திருமணங்களை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர், இணையர்களுக்கு மாங்கல்யம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, விழாப் பேருரை ஆற்றினார்.
இதேபோல், தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் முயற்சியால் 576 இணையர்களுக்கு கோவில்களில் திருமணங்கள் நடைபெற்றன. இந்தத் திருமணங்களும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஆதரவாக அரசின் சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டன.
கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள கொஞ்சிக்குப்பம் அய்யனார் கோவிலில் நடைபெற்ற திருமண விழாவில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், முன்னின்று நான்கு இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், இணையர்களுக்கு மாங்கல்யம் உள்ளிட்ட 47 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்தப் பொருட்கள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு, புதுமணத் தம்பதிகளின் புதிய வாழ்க்கைக்கு உறுதுணையாக அமைந்தன.
நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன், இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை மூலம் அரசு வழங்கும் இத்தகைய திருமண உதவித் திட்டங்கள், சமூகத்தில் சமநிலையை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றுகின்றன. இந்த முயற்சி மூலம் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கு அரசின் ஆதரவு உறுதியளிக்கிறது, என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை சார்பில் ஆய்வாளர் வசந்தம், நிர்வாக அலுவலர் வேல்விழி, பரம்பரையாளர் தர்மகர்த்தா செல்வராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், சந்தியா, கிளை கழக நிர்வாகிகள் தேசிங்கு, செல்வநாதன் கிருஷ்ணமூர்த்தி, சேகர், உதயராஜ், சேகர், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

