தனியார் மதுக்கடை வேண்டாம்.. மாவட்ட ஆட்சியரிடம் மன்றாடிய ஊர்மக்கள்!

Loading

தனியார் மதுக்கடை வேண்டாம் என்று ஊர்பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாண்டிபாளையம் ஆண்டிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைய உள்ள தனியார் மதுபான டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்தக்கோரி 30க்கு மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியாளிடம் மன்றாடி கேட்டுக் கொண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மங்கள ரோடு பகுதியில் மக்கள் நிறைந்த பகுதிக்கு தனியார் மதுபான கடையை கொண்டு வந்தால் பெரிதும் பாதிக்கப்படுவோம் ,நாங்கள் இப்பகுதியில் சுமார் 1500 குடும்பாங்கள் வாழ்ந்து வருகிறோம். ஏற்கனவே இந்த பகுதியில் பொதுமக்கருக்கு மிகவும் இடையூராக இருப்பதால் இங்கு கடை வந்தால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என்று கோரி பல முறை மனு கொடுத்திருக்கிறோம். தற்போது ஆண்டிபாளையம் படகு சவாரி சுற்றுலாத்தலமாக இருக்கிறது இங்கு தனியார் மதுபான கடை வந்தால் தொழிலாளிகள் மற்றும் மாணவ மாணவிகள் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள், அருகில் கோவில் அரசுபள்ளி படகு சவாரி சுற்றுலா தளம் இருப்பதால் பொதுமக்கள் செல்லும், போக்குவறத்து அதிகமாக உள்ள பகுதியாக செயல்படுகிறது இங்கு தனியார் மதுக்கடை வரப்போவதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆகவே சமூகம் தயவுகூர்ந்து எங்கள் பகுதிக்கு தனியார் மதுபான கடை வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறோம் அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவுமாறு பணியுடன் கேட்டும் கொள்கிறோம், என்று அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள்.

0Shares