நியாய விலை கடைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்!

Loading

திருவள்ளூர் கூட்டுறவு நியாய விலை கடையில் பிஓஎஸ் இயந்திரத்தில் பொதுமக்கள் கைரேகை பதித்து பொருட்களை பெற்றுக் கொள்ளும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் நேதாஜி நகர் கூட்டுறவு நியாய விலை கடையில் பிஓஎஸ் இயந்திரத்தில் பொதுமக்கள் கைரேகை பதித்து பொருட்களை பெற்றுக் கொள்ளும் பணிகளையும், வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் த.மோகன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக பூவிருந்தவல்லி வட்டம் மேல்பாக்கம் மற்றும் அருணாச்சலம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளையும் ஆய்வு செய்தார். இவ்வாய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் த.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) ஆர்.பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares