85 நிமிடங்களில் 165 கோயில்கள்.. பென்சில், ரப்பர் ஏதும் இன்றி பேனாவினால் வரைந்து வாலிபர் சாதனை!

Loading

85 நிமிடங்களில் 165 கோயில்களின் படங்களை பென்சில், ரப்பர் ஏதும் இன்றி பேனாவினால் வரைந்து வாலிபர் ஒருவர் சாதனை படைத்தார்,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லாடவரம் ஈச்சங்காட்டை சேர்ந்த சரவணன்- சரஸ்வதி தம்பதியரின் மகன் ஜெயபிரதாப், இவர் சக்கரமல்லூர் பர்வதவர்திணி விநாயக முதலியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் உலக சாதனை படைக்கும் நிகழ்வாக தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 165 கோயில்களின் படங்களை 90 நிமிடங்களுக்குள் ஏ4 அளவிலான தாளில் வரைந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதில் 85 நிமிடங்களில் 165 கோயில்களின் படங்களை வரைந்து சாதனை படைத்தார். குறிப்பாக பென்சில், ரப்பர் ஏதும் இன்றி பேனாவினால் வரைந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கு சோழன் உலக சாதனை புத்தக அமைப்பின் நிறுவனர் நீலமேகம் நிமலன் தலைமை தாங்கினார், மண்டல தலைவர் செல்வராஜ், பொதுச் செயலாளர் ஆர்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தார், இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவனை பாராட்டி சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

இதில் சக்கரமல்லூர் பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன், ஊராட்சி செயலாளர் பழனி, பள்ளி தலைமை ஆசிரியர் சாருமதி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

0Shares