கள்ளக்காதலனுடன் 2 ஆயிரம் தடவை… திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் செய்த கொடூரம்!
திருமணம் நடந்த ஒரே மாதத்தில் மனைவியே கூலிப்படையை ஏவி கணவரை ஏமாற்றி நாடகம் ஆடி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்த சர்வேயர் தேஜஸ்வர்,மற்றும் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கல்லூரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி திருமண நிச்சியதார்த்தம் நடந்தது.திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா திடீரென காணாமல் போனார். கண்ணூரில் உள்ள பிரபல வங்கியில் கேஷியராக உள்ள ஒருவரை காதலித்ததால் அவருடன் சென்று விட்டதாக கருதி திருமண ஏற்பாடுகளை நிறுத்திவிட்டனர்.
இதனை அறிந்த ஐஸ்வர்யா திடீரென வீட்டிற்கு வந்து தனது வருங்கால கணவருக்கு போன் செய்து நான் யாரையும் காதலிக்கவில்லை நான் உங்களைதான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என்று நீலக்கண்ணீர் வடித்தார். ஐஸ்வர்யாவின் பேச்சில் மயங்கிய தேஜஸ்வர் உண்மை என்று நம்பி தனது குடும்பத்தினரை சமாதானம் செய்தார்.
இதனையடுத்து தேஜஸ்வருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 17-ம் தேதி திருமணம் நடந்தது. தேஜஸ்வருக்கு ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. கணவர் வீட்டில் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யா கள்ளக்காதலனுடன் மணிக்கணக்கில் பேசிவந்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தேஜஸ்வர் குடும்பத்தினருக்கும் ஐஸ்வர்யாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தேஜஸ்வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் ஐஸ்வர்யா மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர்யாவை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்து வீசியது தெரியவந்தது.
மேலும் மனைவி கூறியதாவது:எனது தாய் கர்னூலில் உள்ள பிரபல வங்கியில் கேஷியராக வேலை செய்து வந்த ஒருவருடன் எனக்கு கள்ளக்தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். மேலும் யாரும் அளிக்காத இன்ப விருந்தை கள்ளக்காதலன் எனக்கு அளித்தார்.
எங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக தேஜஸ் இருந்தார். காரில் வந்த நபர்கள் நிலம் அளக்க வேண்டும் என கூறி தேஜஸ்வரை காரில் அழைத்து சென்று கொலை செய்து உடலை ஆந்திர மாநிலம் பன்யம் அடுத்த சுகாரி மெட்டு பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஜாதா மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள வங்கி கேஷியரை தேடி வருகின்றனர்.