ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்,நாடக மேடை அமைக்க MLA பூமி பூஜை!
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் நாடக மேடை அமைக்க ,எம்எல்ஏ. மகாராஜன் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள திம்மரச நாயக்கனூர் மற்றும் சண்முக சுந்தரபுரத்தில் சிதிலமடைந்த பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்து, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், தலா 32 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.
மேலும் திருமலாபுரம் ஊராட்சியில் உள்ள பந்துவார் பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூபாய் 12.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய நாடக மேடை கட்ட பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மொட்டனூத்து ஊராட்சியில் பகுதிநேர ரேஷன் கடையை எம்எல்ஏ திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் ,பேரூர் கழகச் செயலாளர் பூஞ்சோலை சரவணன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அக்ஷயா, ரத்தினம், அறநிலை துறை அறங்காவலர் ராம்குமார் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சுரேஷ், கோவிந்தராஜ் உள்பட கட்சியினர், ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.