கலைஞர் பிறந்தநாள் விழா..திருவள்ளூர் திமுகவினர் கொண்டாட்டம்!
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கலைஞர் பிறந்தநாள் விழா சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு சிறப்பாக நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விழாவிற்கு மாவட்ட அவைத் தலைவர் திராவிட பக்தன் முன்னிலை வகித்தார்.இந்த விழாவில் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் நிர்வாகிகள் ரவி அருணன், வி. எஸ்.நேதாஜி, முன்னாள் நகர் மன்ற தலைவர் பொன் பாண்டியன், தி. ஆ. கமலக்கண்ணன், டி.எம். ரவி, டி. என்.ஆர். சீனிவாசன், சி.சு. விஜயகுமார், பவளவண்ணன், அயூப் அலி, பா.ராஜி, பாஸ்கர், சொக்கலிங்கம், திலீப் குமார், முரளி, சுரேஷ் குமார், உலகநாதன் உட்பட கலந்து கொண்டு கலைஞர் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் பிறந்த நாள் விழா மணவாளநகரில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட அவைத்தலைவதிராவிட பக்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் அன்னதானம் வழங்கினார். இதில் நிர்வாகிகள் தாடி நந்தகோபால்,கொப்பூர் திலிப்குமார்,குமரன்,மதியழகன்,ராஜசேகர்,செங்குட்டுவன்,புட்லூர் ராஜேந்திர குமார், வாசு,டில்லி, ராமதாஸ்,பஞ்சாட்சரம், முத்து, திராவிடமணி, சீனிவாசன், அண்ணாமலை, மணிகண்டன், மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பூண்டி ஒன்றியம் நெய்வேலியில் இனிப்பு மற்றும் அறுசுவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் கலந்துகொண்டு கலைஞர் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் நிர்வாகிகள் பா.சிட்டி பாபு, தா.மோதிலால், முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால், சதீஷ் லிங்கேஷ், ராஜா சிங், எழில், சுந்தர், டேவிட், சுதாகர், மோவூர் வேலு, பூண்டி கோபி பாண்டியன் சரவணன் நேதாஜி, பாஸ்கர், லட்சுமணன், ஆனந்தராஜ், சித்ரா ரமேஷ் , நடராஜ், தேவேந்திரன், டில்லி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பூண்டி ஒன்றியம் குப்பம்மாள் சத்திரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சௌக்கர் பாண்டியன் அறுசுவை உணவு வழங்கினார்.
திருவள்ளூர் நகர திமுக சார்பில் நகராட்சி அலுவலகத்தில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு திருவள்ளூர் எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன், நிர்வாகிகள் ராயல் பாஸ்கரன், பரசுராமன், நீலாவதி பன்னீர்செல்வம், தனலஷ்மி சீனிவாசன், செல்வகுமார், ஹேமலதா நரேஷ், பத்மாவதி ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஹோட்டல் வசந்த பவன் அருகிலும், மீரா திரையரங்கம் அருகிலும் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள் பல கலந்து கொண்டு கலைஞர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.