மீண்டும் அதிபராகும் நிகோலஸ் மதுரோ!

Loading

வெனிசுலா நாட்டில் புதிய அதிபராக நிகோலஸ் மதுரோ மீண்டும் தேர்வாகி பதவியேற்க உள்ளார்.

வெனிசுலா நாட்டில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது..இந்த தேர்தலில் 54 கட்சிகள் கலந்துகொண்ட அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சியினர் கடுமையாக ஆளும் கட்சியை கடுமையாக எதிர்த்தனர். அதுமட்டுமல்லாமல் தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறி எதிர்க்கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வெனிசுலாவில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களுடைய வாக்குகளைச் பதிவு செய்தனர். ஆனால் வன்முறை ஏதும் நிகழவில்லை,இதனை தொடர்ந்து நேற்று தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இதில் மொத்தம் 285 உறுப்பினர்களைக் கொண்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஆளும் சோசியலிஸ்ட் கட்சியினர் 230 இடங்களில் வெற்றி பெற்று மீண்டு இரண்டாவது முறை ஆட்சி அமைக்க உள்ளனர்.

மேலும், மாகாணங்களில் 24 இடங்களில் 23 இடங்களில் ஆளும் சோசியலிஸ்ட் கட்சியினர் வெற்றி பெற்றனர். இதனால் அந்நாட்டின் புதிய அதிபராக நிகோலஸ் மதுரோ மீண்டும் தேர்வாகி பதவியேற்க உள்ளார்.விரைவில் அவர் அதிபராக பொறுப்பேற்பார்.

0Shares