கட்டுமான தொழில் அமைப்புகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்!

Loading

கன்னியாகுமரி மாவட்டம் ,கட்டுமான தொழில் அமைப்புகள் சார்பாக மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வேப்ப மூடு சந்திப்பில் உள்ள சர் சிவி இராமன் பூங்கா முன்பு ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் கன்னியாகுமரி மாவட்ட சிவில் இஞ்சினியரிங் அசோசியேஷன் தலைவர் சரவண சுப்பையா தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்குவாரி உரிமையாளர்கள் , எம் சான்ட், பி சான்ட், ஜல்லி கற்கள் விலையை அபரிதமாக தொடர்ந்து உயர்த்தி வருவதாகவும், குறுகிய காலத்தில் கிரஷர் பொருட்களின் விலையை ஒரு யூனிட்டுக்கு மூவாயிரம் வரை உயர்த்தி உள்ளதாகவும், இது 100 சதவீத விலை உயர்வாகும், இந்த விலை உயர்வால் ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கிரஷர் உரிமையாளர்களின் அநியாயமான விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் அரசாங்கம் தரமான எம் சான்ட், பிசான்ட், ஜல்லி கற்களை நியாமான விலையில் கிடைத்திட நடவடிக்கை எடுக்க கோரியும், ஆற்று மணல் குவாரிகளை திறக்க கோரியும் கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்ட போராட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு , கன்னியாகுமரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன், ஹலோ பிளாக் அசோசியேசன் கட்டுமான மாவட்ட தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட கட்டுமான தொழில் ஈடுபட்டு வரும் அனைத்து அமைப்புகளும் கன்னியாகுமரி மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் செயலாளர் சகாய ஜார்ஜ் ரூபேஸ், துணைத்தலைவர்கள் அருண் , செந்தில்குமார், பொருளாளர் காசிநாதன், இணைச் செயலாளர் அகஸ்டின் இனிகோ , நிர்வாக உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, ஜார்ஜ் ஜோசப், ராஜன், ஆல்பர்ட் நெல்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares