பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணி..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்!

Loading

திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 56 பள்ளிகளை சேர்ந்த 214 வாகனங்களை சிறப்புக் கூட்டு தணிக்கைக்கு உட்படுத்தி கூட்டாய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக மைதானத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 56 பள்ளிகளை சேர்ந்த 214 வாகனங்களை சிறப்புக் கூட்டு தணிக்கைக்கு உட்படுத்தி கூட்டாய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சீனிவாசன் முன்னிலையில் துவக்கி வைத்து பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பள்ளி பேருந்துகள் பாதுகாப்பாக இயக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் பயணிக்க கூடிய இந்த சாதாரண பேருந்துகளுக்கு பல்வேறு விதிமுறைகள் உண்டு. அதனை சரியாக கடைபிடிக்கப்படுகிறதா, இல்லையா என்பதை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் மாவட்ட வாரியாக ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த பள்ளி பேருந்துகளை பள்ளிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக ஆய்வு செய்வது வழக்கம். அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, செங்குன்றம், பூவிருந்தவல்லி ஆகிய வட்டார அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

திருவள்ளூர், ஊத்துக்கோட்டை – 214, இதர திருத்தணி, செங்குன்றம், பூவிருந்தவல்லி ஆகிய வட்டாரங்களில் ஆய்வுகள் பின்னர் துவங்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஆய்வில் அவசர கதவுகள்,. வேக கட்டுப்பாட்டு கருவி, சிசிடிவி ஆகியவைகள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா குறித்தும். ஓட்டுநர்கள் தினந்தோறும் 70 குழந்தைகள் உங்கள் கண்காணிப்பில் உள்ளது குழந்தைகள் வாகனங்களில் பாதுகாப்பாக சொல்வதை கடைபிடிக்க வேண்டும். 40 கி. மீ வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவிகள் கண்டிப்பாக பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை பள்ளி வாகனங்கள் சீரான நிலையில் இயக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் ஏதாவது ஒரு காரணத்தினால் பள்ளி பேருந்துகள் சட்டங்களை மீறினாலோ அல்லது அந்த சட்டங்களுக்கு உட்படாமல் வேகமாக ஓட்டினாலோ மாவட்ட நிர்வாகம் சார்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீறியும் புகார்கள் வந்தால் தாமதமின்றி உடனடியாக பேருந்தின் உரிமம் இரத்து செய்யப்படும் என்பதை அனைத்து பள்ளி உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.

பின்னர் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 56 பள்ளிகளின் 214 வாகனங்களில் முதல் கட்டமாக 108 பள்ளி வாகனங்கள் சிறப்பு குழுவினால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 86 வாகனங்கள் சரியாக உள்ளதை அனுமதித்தும், 22 வாகனங்களுக்கு தீயணைப்பான் இல்லாதது, அவசரகால வழியில் உள்ள இருக்கை அகற்றாதது, சிசிடிவி கேமரா வேலை செய்யாதது மேலும் சில குறைகளை சரி செய்து மறு ஆய்வுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னதாக, தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைப்பது பற்றியும், பள்ளி வாகனங்களில் உள்ள தீ அணைப்பானை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாய்வில். திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் இராஜசேகரன், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் வீரராகவர் மாவட்ட கல்வி அலுவலர் (திருவள்ளூர்) தேன்மொழி, தீயணைப்புத் துறையினர், வாகன ஓட்டுநர்கள், மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares