பொதுமக்கள் புகார் எதிரொலி.. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் MLA அனிபால் கென்னடி ஆய்வு!

Loading

புதுவை உப்பளம் தொகுதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அனிபால் கென்னடி ஏம்எல்ஏ புகாரின் பேரில் ஆய்வு செய்தார்.

புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறை, பொது சுகாதாரக் கோட்டத்தின் கீழ் செயல்படும் கழிவுநீர் உட்கோட்டம் உந்து நிலையம், சுத்தமாக இல்லாததும், செயல்பாட்டில் பல்வேறு குறைகள் காணப்படும் நிலையிலும் இருப்பதை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களுக்கு பொது மக்கள் மத்தியில் வந்த பூகாரின் பெயரில் நேரில் சென்று நிலையத்தை முழு ஆய்வு செய்தார்.

நிலையம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், சுத்திகரிப்பு முறையில் பெரும் சந்தேகம் இருப்பதாகவும் அதிகாரிகளிடம் கண்டனம் தெரிவித்தார். சுற்றுப்புற சூழல் நாற்றம் வீசும் அளவிற்கு மோசமான சூழ்நிலை காணப்பட்டது. “சாலையில் நடக்க முடியாத அளவுக்கு நாற்றம் வீசுகிறது; மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்” எனக் கூறிய அவர், அதற்கு பொறுப்பான அதிகாரிகளை அழைத்து கண்டித்தார்

இந்நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார். புதுவை முழுவதும் அதிகமாக அடைப்புகள் ஏற்படுவதால் அதிகாரிகள் கூடுதலாக மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று சட்ட மன்ற உறுப்பினர் பரிந்துரை செய்தார்.
உடன் இளநிலை பொறியாளர் சௌமியா, திமுக தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர் ராகேஷ், காங்கிரஸ் நிர்வாகி சங்கீத் ஆகியோர் உடன் இருந்தனர்

0Shares