உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக கண்காட்சி..மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தொடங்கி வைத்தார்!

Loading

பொன்னேரியில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி முழுநேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் திறந்து வைத்து பார்வையிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்:ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் புத்தக வாசகர்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது அதனடிப்படையில் பொன்னேரி முழுநேர கிளை நூலகத்தில் உலக புத்தக தினவிழா கண்காட்சியினை புத்தக வாசகர்கள் பார்வையிடும் வகையில் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது . இக்கண்காட்சியில் போட்டித் தேர்வு நூல்களை சட்ட நூல்கள், இதழியல் , அரசியல் அமைப்பு சட்டம் முகப்புரை போன்ற பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கண்காட்சி அனைவருக்கும் புத்தகங்களை வாசித்து பயன் பெறுங்கள் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்தார்.

முன்னதாக வாசகர் வட்டத் தலைவர் திரு.பா.ஜோதீஸ்வரன், வாசகர் வட்ட துணைத் தலைவர் திரு.வெல்டன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் இரண்டு மின் விசிறிகள் நன்கொடையாக நூலகத்திற்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து பழவேற்காடு இந்துஜா பரத் ரூ.1000 வழங்கி நூலகத்தில் புரவலராக தன்னை இணைத்துக் கொண்டார்.

பின்னர், போட்டித் தேர்வு மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடி தேவையான போட்டித்தேர்வு சார்ந்த நூல்களை பெற்று வழங்குவதாக கூறினார். புத்தக வாசிப்பினால் தான் ஒரு மாணவன் தன்னை மட்டுமன்றி நாட்டையும் உயர்த்த முடியும் என்று வாசகர்களிடையே உரையாடினார். பொது நூலகத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நூலகக் கட்டிடம் கட்டித் தர ஆவணம் செய்துள்ளார்.தொடர்ந்து பொன்னேரி நகராட்சி 7 -ஆவது வார்டு இடைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி, பொன்னேரி நகர் மன்றத் தலைவர்.பரிமளம் விஸ்வநாதன், நகராட்சி ஆணையர் புஷ்கர், வட்டாட்சியர் சோமசுந்தரம் வாசகர், மு.வாசகர் வட்டத் தலைவர் த.நக்கீரன், வாசகர் வட்ட பொருளாளர் ம.இரவிச்சந்திரன், பன்னீர் செல்வம் நூலகர்கள் பா.லி.சங்கர், வே.தியாகராஜன், நூலகப் பணியாளர்கள், வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares