சென்னை மாநகராட்சியின் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து ஆய்வு செய்த மேயர் பிரியா!

Loading

பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டல அலுவலகங்களிலும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உதவி மையங்களை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தொடங்கிவைத்தார்.

சென்னை மாநகராட்சி,மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள்,நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி, வெளி நிறுவனங்கள் மற்றும் சென்னையில் வேறுஎந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியும் அனைத்து வகையிலான தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் சார்பில்வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் இதர சேவைகளைப் பெற்று
பயனடையும் வகையில், மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்துமண்டல அலுவலகங்களிலும் உதவி மையங்களைத் தொடங்கி வைக்கும் விதமாக,அண்ணாநகர் மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்களுக்கான உதவி மையத்தினை தொடங்கி வைத்துசெயல்பாட்டினைப்பார்வையிட்டார்.

தொடர்ந்து, மாண்புமிகு மேயர் அவர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தஉறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும், தூய்மைப் பணியாளர்களுக்கானநலத்திட்டங்கள் குறித்த தகவல் கையேட்டினையும் வழங்கினார்.தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவுசெய்யும் அனைத்து வகையிலான தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் மற்றும்அவர்தம் குடும்பத்தினருக்கு விபத்து காப்பீட்டுத் திட்ட உதவி, இயற்கை மரணஉதவித் தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், திருமணஉதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, கண் கண்ணாடி
உதவி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.

மேலும், முறையான மற்றும் முறைசாரா கழிவுநீர் சார்ந்த பணிகளில் நேரடியாகஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு (Core Sanitation Workers) தாட்கோ மூலம்தொழில் திறன் பயிற்சி, தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட (SWDS)அடையாள அட்டை, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் குறைந்தபட்ச ஊதியம்
உறுதி செய்தல், சமூகப் பாதுகாப்பு தொடர்பு & வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள்உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் கூடுதலாக தாட்கோ மூலம் வழங்கப்பட்டு வருகிறது.பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தூய்மைப் பணியாளர்களின்நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான நலத்திட்டங்கள் உரிய முறையில்சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வகையிலான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள தூய்மைப்
பணிகளை மேற்கொள்ளும் அனைத்து வகையிலான 17,659 தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் மற்றும் முறையான, முறைசாரா கழிவுநீர் சார்ந்த பணிகளில் ஈடுபடும்17,627 தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 35,286 தூய்மைப் பணியாளர்களுக்குநல வாரியத்தின் அடையாள அட்டைகள் பெற்று வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமாகமேற்கொள்ளப்பட்டு, இதுவரை 12,273 நபர்களுக்கு தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதர
நபர்களுக்கு நல வாரியத்தின் உறுப்பினர் அட்டை வழங்க உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் சார்பில்
வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த தகவல் கையேடு மாநகராட்சியின் சார்பில்
வெளியிடப்பட்டு, அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு
வருகிறது.இதன் தொடர்ச்சியாக, மேற்குறிப்பிட்ட தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள்
நல வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்து வகையிலான

தூய்மைப் பணியாளர்களுக்கும் கிடைத்திடவும் மற்றும் இதர தொடர்புடைய
சேவைகள் பெறுவதற்கும் ஏதுவாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு
மண்டலத்திலும் ஒரு உதவி மையம் என 15 மண்டலங்களில் உதவி மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் இந்த மையங்களை அணுகி
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கும்
உரிய நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும், இதர சேவைகளைப் பெற்றும்
பயன்பெறலாம்.
மேலும், ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும்
கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 1913 எண்ணிற்கும் தொலைபேசியில் அழைத்து
விவரங்களைப் பெற்று பயன்பெறலாம்.
வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு மேயர் அவர்கள் செனாய் நகர், புல்லா
அவென்யூவில் ரூ.15.70 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அவசரகால
மகப்பேறு மருத்துவமனை, மஞ்சக்கொல்லை சென்னை பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் மூலதன நிதியின் கீழ், ரூ.3.71 கோடி மதிப்பில்
மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள், அமைந்தகரை சென்னை
நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.4.15 கோடி
மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டடப் பணி, வேலங்காடு
மயானபூமியில் ரூ.98 இலட்சம் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றைப்
பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு
வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில், ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப.,
அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.மோகன், துணை ஆணையாளர்கள்
திரு.வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., (பணிகள்), திரு.கே.ஜெ.பிரவீன் குமார்,
இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்), மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் திரு.ந.இராமலிங்கம்,
நிலைக்குழுத் தலைவர்கள் திரு.நே.சிற்றரசு (பணிகள்), டாக்டர் கோ. சாந்தகுமாரி
(பொதுசுகாதாரம்), மண்டலக்குழுத் தலைவர் திரு.கூ.பி.ஜெயின், மாமன்ற
உறுப்பினர்கள் திருமதி மெட்டில்டா கோவிந்தராஜ், திருமதி கே. ராணி மற்றும்
அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares