202 கிலோ குட்கா மற்றும் சொகுசு கார் பறிமுதல்… இரண்டு வாலிபர் கைது.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்பனை செய்ய வைத்திருந்த 202. 486 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் புகையிலை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக 2 வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .ஸ்டாலின் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.அதன் தொடர்ச்சியாக புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை துணை ஆய்வாளர் மகேஸ்வர்ராஜ் தலைமையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் புதுக்கடை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாராயபுரம் பகுதியில் விற்பனை செய்ய வைத்திருந்த 202. 486 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் புகையிலை பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மெகபூப் என்பவரின் மகன் முகமது ஷபீக் (37) பார்த்திபுரம் பகுதியை சேர்ந்த ஜாண்ராஜ் என்பவரில் மகன் அரவிந்த் (28) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து புதுக்கடை காவல் நிலையைதில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.