மாமரத்தில் இயற்கை முறையில் பூப்புடிப்பு பற்றிய செய்முறை.. விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த மாணவிகள்!

Loading

தேனி மாவட்டம் தேனி கோட்டூர் கிராமத்தில் மாமரத்தில் இயற்கை முறையில் பூப்புடிப்பு பற்றிய செய்முறை பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

புகைப்பூட்டுவதால் , மாமரத்தில் உள்ள எத்திலீன் ஹார்மோன் பூப்புடிப்பை அதிகரிகிறது என்பதை குறித்து, கிராமத்தில் தோட்டக்கலை துறை சார்பில் மாவில் இயற்கை முறையில் பூப்புடிப்பு பற்றிய செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியை துணை தோட்டக்கலை அலுவலர் திரு. பாண்டியன் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் திரு.கருப்பசாமி அவர்கள் இருவரும் தலைமை தாங்கி துவங்கி வைத்தனர். மேலும் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் உள்ள RVS பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் ரா. தனிஷா , அ. தர்சனா, அ.தர்ஷிணி, மூ.சி. தீக்க்ஷனா, அ. கௌசல்யா மற்றும் வி.ஹர்சிதா ஆகியோர் கிராமபுற தோட்டக்கலை பணி அனுபவத்திட்டத்தின் வாயிலாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்பூட்டுதல் மூலம் மரத்தில் பூப்புடிப்பு பற்றிய விளக்கங்களை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர்.

இச்செயல்முறையானது மாமரத்தில். பூப்புடிப்பு பற்றிய விளக்கங்களை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர். இச்செயல் முறையானது மாமரத்தில் அடியில் விறகுகள் மற்றும் காய்ந்த இலைகள் போன்றவற்றை எரித்து புகையை உருவாக்கி அதை மாம்பழ மரத்திற்குள் செலுத்துவதன் மூலம் பூப்பூக்கும் காலத்தை மூன் கூட்டியே தொடங்கச் செய்வதற்கும், பூக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் மற்றும் அதிகமான பழங்கள் உருவாகச் செயல்வதற்கும் உதவுகிறது என்பதை விரிவாக விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் கோட்டூர் கிராமத்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். RVS பத்தமாவதி தோட்டக்கலை இணை பேராசிரியர் முனைவர் வா. புனிதவதி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தேவையான அறிவுரைகள் வழங்கி வழிநடத்தினர்.

0Shares