அறியும் திறனை சோதிக்கும் தேர்வு. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறிவியல் இயக்கம் சார்பில் சான்றிதழ்!
அறிவியல் தொழில்நுட்பம், சொற்சுருக்கம, சிந்திக்கும் திறனையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்றமாணவர்களுக்கு இயக்கம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல்இயக்கம்ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வை நடத்ததிவருகிறது.
26வது ஆண்டாக இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் துளிர் திறனறிதல் தேர்வு 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 15 மையங்களில் நடைபெற்றது. இதில் இயற்பியல், வேதியில், உயிரியில், மரபுசார் அறிவியல், புதிர்க் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், துளிர் கட்டுரைகள், தற்கால நிகழ்வுகள், அறிவியல் தொழில்நுட்பம், சொற்சுருக்கம, சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்றமாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில்பள்ளயின்தலைமையாசிரியர் அ.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன்,திருப்பத்தூர் மாவட் நிர்வாககுழு உறுப்பினரும்ஓய்வுபெற்றதலைமையாசிரியர் என்.கருனாநிதி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினர்.முன்னதாக பள்ளியின் உதவி தலைமை யாசிரியர் எம்.கீதா வரவேற்று பேசினார்.உடற்கல்வி ஆசிரியர் தினகரன் ஒருங்கிணைத்தார். வேலூர் கிளை செயலாளர் முத்து.சிலுப்பன், ப.சேகர், பி.ஹேமலதா, த.கனகா ஆகியோர் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.