பொன்முடி உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் தள்ளு முள்ளு!
ராணிப்பேட்டையில் அமைச்சர் பொன்முடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசாருக்கும் அஇஅதிமுகவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையத்தில் அஇஅதிமுக மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமுதாயத்தை இழிவாகவும் மிகவும் கேவலமாகவும் விமர்சித்து பேசிய திமுக அமைச்சர் பொன்முடி அவர்களை கண்டித்து கண்டனம் கோஷம் எழுப்பியும், உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைச்சர் பொன்முடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசாருக்கும் அஇஅதிமுகவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, வாலாஜா நகர செயலாளர் டபிள்யூ. ஜி. மோகன், ஆற்காடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.