அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்..முன்னாள் அமைச்சர் எம்சி. சம்பத் எஸ்.அப்துல்ரஹீம் பங்கேற்பு!

Loading

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்..முன்னாள் அமைச்சர் எம்சி. சம்பத் எஸ்.அப்துல்ரஹீம் பங்கேற்பு!

கடலூர் வடக்கு மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்டம் நத்தம் ஊராட்சி எம்ஜிஆர் திடலில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்சி.சம்பத், தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும் சிறுபான்மை நலப்பிரிவு எஸ்.அப்துல்ரஹீம், பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர்செல்வம், மாநில மகளிர் அணி துணை செயலாளர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டடு சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் நத்தம் கோபு (எ) ரகுராமன் முன்னிலை வகித்தார்.

மற்றும்பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வகிகள் மற்றும் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares