அருங்குணம் ஊராட்சியில் மாணவர்கள் பங்கேற்ற கலாஜாதா நிகழ்ச்சி!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்அருங்குணம் ஊராட்சியில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலாஜாதா நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர்,அண்ணாகிராமம் மற்றும் தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் இணைந்து கலாஜாதா நிகழ்ச்சி நடத்தினர்.
கலாஜாதா திட்டம் என்பது, குறிப்பாக கிராமப்புற இந்தியாவில், நாட்டுப்புற நாடகங்களைப் பயன்படுத்தி பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் திட்டங்கள் குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க உதவுகிறது.இங்கு உழவர் செயலி மற்றும் மஞ்சள் ஒட்டும் பொறி குறித்து மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கினர்.
பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முனைவர் விஜய்செல்வராஜ் இம்மாணவர்களை வழி நடத்துகிறார்.