தென்யிைல் வேர் ஊட்டம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்த மாணவர்கள்!

Loading

தெப்பம்பட்டி – சொக்கலங்கபுரத்தில் தென்யிைல் வேர் ஊட்டம் பற்றி விவசாயிகளுக்கு செய்து காண்பித்து விளக்கமளித்தனர். வேர் ஊட்டத்தின் முக்கியத்துவம், பயன்கள் மற்றும் செய்முறை பற்றியும் தெளிவாக விளக்கமளித்து காண்பித்தனர்.

தேனி மாவட்டம் தேனி ஆண்டிபட்டி வட்டாரம், தெப்பம்பட்டி – சொக்கலங்கபுரத்தில் “தென்னையில் வேர் ஊட்டம்” பற்றிய செய்முறை விளக்க நிகழ்ச்சியானது துணை தோட்டக்கலை அலுவலர் திரு. நீதிநாதன் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் திரு. பால்பாண்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியிலுள்ள RVS பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியில் நான்காம் ஆண்டு தோட்டக்கலை பயிலும் மாணவிகள் ர.கௌசிகா, பெ. லாவண்யா, ஆ.லியாஜேன், செ. மாலதி, மா.மாளவிகா மற்றும் க.மாரிஸ்வரி ஆகியோர் கிராமபுற பணி அனுபவத்திட்டத்தின் வாயிலாக கலந்து கொண்டு தென்யிைல் வேர் ஊட்டம் பற்றி விவசாயிகளுக்கு செய்து காண்பித்து விளக்கமளித்தனர். வேர் ஊட்டத்தின் முக்கியத்துவம், பயன்கள் மற்றும் செய்முறை பற்றியும் தெளிவாக விளக்கமளித்து காண்பித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழங்கக்கூடிய TNAU டானிக் பற்றி தெளிவாக அறிந்து கொண்டனர். RVS பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியின் இணை பேராசிரியர் முனைவர் வா. புனிதவதி அவர்கள் இந்நிகழ்க்கிக்கு தேவையான அறிவுரையை வழங்கி வழிநடத்தினார்.

0Shares