கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு.. அணைக்கட்டு தொகுதி 581பயனாளிகளுக்கு பணி ஆணை!

Loading

அணைக்கட்டு ஊராட்சியில் 581பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார். அவர்களும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன்,ஆகியோர் வழங்கினர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளை சார்ந்த 581 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார். அவர்களும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், அவர்களும் நேற்று கெங்கநல்லூர் கலைஞர் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில்மாவட்டஊராட்சிக்குழுத்தலைவர் மு. பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ. செந்தில்குமரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், அணைக்கட்டு ஒன்றியக்குழுத்தலைவர் சி. பாஸ்கரன், ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திருமதி சித்ரா குமரபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணமேனன். கெங்கநல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி, திருமதி ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares