முதன்முறையாக ஹஜ் புனிதப் பயணிகளுகு புத்தறிவு பயிற்சி!
பேர்ணாம்பட்டில் சார்மினார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டியின் புத்தறிவு பயிற்சி முகாம் முதன்முறையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டிலிருந்து வருடம்தோறும் 100க்கும் மேற்பட்டோர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். அரபு நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள்,பழக்கவழக்கங்கள்,போக்குவரத்து ,பயண ஏற்பாடுகள், மருத்துவம் மற்றும் ஹஜ் பயணகடமைகள் குறித்து அறிந்து கொள்ளவும், தடுப்பூசிக்காகவும் மாவட்ட தலை நகர் வேலூருக்கு செல்ல வேண்டியிருந்தது.
வேலூர் சென்று வருவது கோடை காலத்தில் ஹஜ் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு பேர்ணாம்பட்டு நகரிலேயே புத்தறிவு பயிற்சி முகாமும், தடுப்பூசி முகாமும் ஏற்பாடு செய்து கொடுக்க சார்மினார் பள்ளிவாசல் நிர்வாகி ஜனாப் வி. .ரபீக் சாகிப் தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டிக்கு கோரிக்கை வைத்ததின்பேரில் ஹஜ் கமிட்டியும் பயணிகளின் நலன் கருதி பேர்ணாம்பட்டில் சார்மினார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டியின் புத்தறிவு பயிற்சி முகாம் முதன்முறையாக நடைபெற்றது.
இதில் 125 ஹஜ் பயணிகள் கலந்து கொண்டு விளக்கங்கள் பெற்றனர்.மூத்த பயிற்சியாளர் ஹபீபுல்லாஹ் ரூமி , தலைமையில் பயிற்சியாளர்கள் சல்மான், ஷபிவுல்லா, வசீம் அஹ்மத் ஆகியோர் பயிற்சி வகுப்பை நடத்தினர்.இதில் மவுலானா முப்தி ரஷீத் அகமது சவுதி சாகிப் ஹஜ் மற்றும் உம்ரா பயணம் பற்றி விளக்கவுரை யாற்றினார். தடுப்பூசி முகாமும் பேரணாம்பட்டிலேயே நடத்திடவும், ஆண்டுதோரும் இந்நிகழ்ச்சி தொடர்ந்திட ஏற்பாடு உறுதியானது.
இந்நிகழ்ச்சியில் மரீத் கல்லூரி செயலாளர் மரீத் ஜகூர் சாகிப், நகரமன்ற துணைத்தலைவர் ஜுபேர் அகமது, சுன்னத் ஜமாத் படேல் இஸ்மாயில் சாகிப், பள்ளிவாசல் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.முடிவில் ஆசிரியர் கசாரிசாகிப் நன்றி கூறினார்.