புதிய சாலை அமைக்கும் பணி..அனிபால் கென்னடி ஏம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகளை அனிபால் கென்னடி ஏம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி: உப்பளம் தொகுதி அகத்தியர் நகர், திருவள்ளுவர் வீதியில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களின் தலைமையில், அப்பகுதி குடியிருப்போர் மத்தியில் சமீபத்தில் நடைபெற்றது.
தற்போது அந்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தார் சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறும் வகையில், உப்பளம் தொகுதி ஏம்எல்ஏ அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சென்று அதிகாரிகளுடன் பணிகளை பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.
எம்எல்ஏ ஆய்வின் போது நகராட்சி உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், பணி ஆய்வாளர் ரவிச்சந்திரன், மாநில சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நோயல், கிளை செயலாளர்கள் காலப்பன், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.