நோ என்ட்ரி’ படத்தின் 2-ம் பாகத்தில் தமன்னா!
தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா 2’ படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது.
தமிழைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை தமன்னா.
தற்போது இவர், ‘ஒடேலா 2’ படத்தில் நடித்திருக்கிறார். நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அஜய் தேவ்கனின் ‘ரெய்டு 2’ படத்தில் ஒரு பாடலுக்கும் தமன்னா நடனமாடி இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘நோ என்ட்ரி’ படத்தின் 2-ம் பாகத்தில் தமன்னா கதாநாயகிகளில் ஒருவராக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், அதிதி ராவ், ஷ்ரத்தா கபூர் , மனுஷி சில்லர் மற்றும் பிருத்விராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.