பண்ருட்டியில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

Loading

பண்ருட்டியில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
கடலூர் மாவட்டம் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் கோடைகால வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை  பண்ருட்டி நகர மன்ற தலைவர் இராஜேந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.
மேலும் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் பத்திரிகை சங்கங்கள் சார்பிலும்  கோடை வெயிலில் தாக்கத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி, நீர் மோர் பந்தல் அமைத்து  இன்று முதல் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.
 இதில் பத்திரிக்கை சங்கத்தின் மாவட்ட தலைவர் ஷேக்நூர்தீன், செயலாளர் ஸ்டில் ரவி, பொருளாளர் சுதாகர்,
துணைச் செயலாளர் அருண்குமார், துணைத் தலைவர் தணிகாசலம், ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம், பூபாலன் சந்தன கோபி, ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் இதில் பொதுநல அமைப்பின் தலைவர் தெய்வீகதாஸ் தேவநாதன், ராஜா நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சதீஷ்குமார் ஆம் ஆத்மி கட்சி மற்றும் திமுக பிரமுகர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கோடை வெயிலுக்கு நீர் மோர் அருந்தி மகிழ்ந்தார்கள்.
0Shares