மக்களைத் தேடி மருத்துவம்.. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட நீலகிரி பயனாளிகள்!
நீலகிரி மாவட்டத்தில், “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில், 07.05.2021 அன்று முதல் தற்போது வரை 5,96,153 நபர்களுக்கு தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளும், 1,07,392 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகங்களும், 43,766 நபர்களுக்கு நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகங்களும், 38,835 உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு மருந்து பெட்டங்களும், 7,785 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சை சேவைகளும், 6,696 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சை சேவைகளும் வழங்ப்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி திருமதி பெட்ரிஷ்யா அவர்கள் கூறுகையில்:-
என் பெயர் பெட்ரிஷ்யா, எனக்கு 54 வயதாகிறது. நான் உதகமண்டலம் நகர் புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்தபோது, எனக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்தது கண்டறியப்பட்டது. மிகவும் சிறந்த முறையில் மருத்துவரின் ஆலோசனைப்படி மூன்று மாதத்திற்கு ஒரு முறை நகர் புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வந்தேன்.
மேலும், பெண் தன்னார்வலர்களால் ரோஸ் மவுண்ட்பகுதியிலுள்ள எனது இல்லத்திற்கு வந்து பரிசோதிக்கப்பட்டு மாதந்தோறும் மாத்திரைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டது. இதன் மூலம் தற்போது நான் நலமுடன் உள்ளேன். இதுபோன்ற திட்டத்தினை துவக்கி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி திருமதி பரமேஸ்வரி
அவர்கள் கூறுகையில்:-
என் பெயர் பரமேஸ்வரி, எனக்கு 69 வயது ஆகிறது. நான் கூடலூர் வட்டாரத்தின் நெல்லியாளம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்தேன். அப்பொழுது எனக்கு உயர் இரத்த அழுத்த நோய் இருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை துவக்கி வைத்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
இத்திட்டத்தின் மூலம் வடமூலா கிராமத்திலுள்ள எனது வீட்டிற்கு பெண் தன்னார்வலர்கள் மாதந்தோறும் நேரிடையாக வந்து பரிசோதித்து, ஆலோசனைகள் வழங்கி, மருந்து, மாத்திரைகளும் வழங்கினார்கள். மேலும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை கல்லட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் வந்து மருத்துவரால் பரிசோதித்து, மாத்திரைகளை வழங்கினார்கள். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பொதுமக்களின் நலன் கருதி இதுபோன்ற சீரிய திட்டத்தினை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலன் கருதி தொடர்ந்து பல சீரிய திட்டங்களை அறிவித்து, அதனை மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை நீலகிரி மாவட்ட பொதுமக்கள் தெரிவித்து கொண்டனர்.